நேர்மைக்கு சொந்தக்காருங்க சர் இந்த பயலுக..!மார்தட்டும் ரசிகர்கள்..!
ஆஸ்திரேலியா சிட்னியின் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவருகிறது.முதல் ஆட்டத்தில் இந்தியா 622 ரன்களை குவித்து உள்ளது.பின்னர் களமிரங்கிய ஆஸ்.,236/6 விக்கெட் இழப்பிற்கு ரன்களை எடுத்துள்ளது.இந்நிலையில் இந்த போட்டியின் போது நேர்மையாக நடந்து கொண்ட இந்திய வீரரான கே.எல்.ராகுலை கள நடுவர்ர் உள்பட அனைவரும் கைதட்டி வெகுவாக பாராட்டியுள்ளனர்.
எதற்கான இந்த பாராட்டு என்றால் ஆஸ்திரேலிய வீரர் மார்க்ஸ் ஹேரிஸ் பேட்டிங் செய்தார்.அப்போது ஜடேஜா பந்து வீச பந்து உயரத்தில் பறந்து வந்ததை கே.எல்.ராகுல் மடக்கி கேட்ச் பிடித்தார்.
ஆனால் அனைவரும் பார்வையிலும் அது அவுட்டாகவே தெரிந்த நிலையில் மார்க்ஸ் அவுட் ஆகிவிட்டதாக எல்லோரும் நினைத்த நேரத்தில் தான் பந்தைப் பிடித்ததில் அழுட் ஆகவில்லை என்று கே.எல்.ராகுலோ, தரையில் பட்டுத்தான் பந்து கை சேர்ந்ததாக தாமாக முன்வந்து நேர்மையாக அறிவித்தார். அவரது நேர்மையை அம்பயர் உள்பட அனைவரும் கைதட்டி பாராட்டினர்.