தோனி தவறான நேரத்தில் ஆட்டமிழந்தார்…!4 ரன்னில் 3 விக்கெட்..!தோல்விக்கு காரணம்..!விராட் கொக்கரிப்பு..!!

Default Image

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலியாவில் சிட்னியில் நடந்த முதல் ஒருநாள் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் முடிவில்  5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன் குவித்தது.

இதில் அந்த அணியின் ஹேண்ட்ஸ்காம்ப் 61 பந்தில் 73 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), உஸ்மான் கவாஜா 59 ரன்னும், ஷான் மார்ஷ் 54 ரன்னும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.இந்திய பந்து வீச்சாளார்களான புவனேஷ்வர் குமார் மற்றும்  குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் கைப்பற்றிய நிலையில் 289 ரன்கள்  இலக்கவுடன்  களமிரங்கி விளையாடிய இந்திய அணியால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 254 ரன்களே எடுக்க முடிந்து படுதோல்வி அடைந்தது.

இதில் ரோகித் சர்மா சதம் அடித்தும் பலன் இல்லாமல் போனது இந்திய அணிக்கு ஆனால் 129 பந்தை எதிர்கொண்ட சர்மா 133 ரன்னும் (10 பவுண்டரி, 6 சிக்சர்) அடங்கும் மறுமுனையில் தோனி 96 பந்தில் 51 ரன்களை எடுத்தார் இதில்(3 பவுண்டரி, 1 சிக்சர்) அடங்கும்.ஆனால் இந்திய அணியின் தொடக்க வீரர்களான ஷிகர் தவான்,அம்பதிராயுடு மற்றும் அணியின் கேப்டன் விராட் கோலியின் அவுட் மற்றும் 4 ரன்களில் 3 விக்கெட் இந்த அணிக்கு அதிர்ச்சியை கொடுத்தது.இதனால் அடுத்து களமிரங்கும் வீரர்களுக்கு அழுத்தம் அதிகமானது.

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில்  எங்களது ஒருநாள் ஆட்டம் திருப்தி அளிக்கவில்லை. ஆனால் பந்து வீச்சில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம் என்றே கருதுகிறோம்.

காரணம் இந்த ஆடுகளத்தில் 300 ரன்னுக்கு மேல் அசாதாரணமாக குவிக்கலாம்.ஆனால் 289 ரன்கள் இலக்கு சேஸ் செய்யக்கூடியதுதான். இதில் இந்திய அணியின் வீரர்கள் தொடக்கத்திலேயே 4 ரன்னில் 3 முக்கிய விக்கெட்டை கொடுத்ததே  தோல்விக்கு முக்கிய காரணம்.இந்த சரிவே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்துவிட்டது.

ஆனால் இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா அபாரமாக விளையாடினார். அவருக்கு உறுதுணையாக தோனி இருந்து செயல்பட்டார். ஆனால் ஆட்டத்தின் வேகத்துக்கு தகுந்தப்படியாக நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டு இருக்க வேண்டும்.இதில் ரோகித்தும், தோனியும் நீண்ட நேரம் களத்தில் நின்று  சற்று வாய்ப்பை பெற்றுக் கொடுத்தனர். ஆட்டத்தில் தோனி தவறான நேரத்தில் ஆட்டம் இழந்தும் மேலும்  அவரது அவுட்டும்   ரோகித் சர்மாவுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியது.

மேலும் இதில் ஒரு ஜோடியாவது நிலைத்து  ஆடியிருந்தால் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து இருப்போம். இதில் எங்களை ஆட்டத்தை விட ஆஸ்திரேலிய அணி மிகச் சிறப்பாகவே செயல்பட்டது.மேலும் இந்த ஆட்டத்தின் முடிவை பற்றி நாங்கள் அதிக மன அழுத்தத்துக்கு எல்லாம் ஆளாக மாட்டோம். இதில் இருந்து அணியை எவ்வாறு மேம்படுத்துவது என்பது தான் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்