IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!
நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற 63% வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேற வாய்ப்புள்ளது.

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம் தேதி) நடைபெறுகிறது. நேற்றைய தினம் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா அணி, நாளை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் நேற்று நியூசிலாந்துடன் இந்தியா மோதியது. முதலில் பேட் செய்த இந்தியா 249 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 79 ரன்கள் குவித்தார். 250 ரன்கள் இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக வில்லியம்சன் 81 ரன்கள் குவித்தார். இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார். நியூசிலாந்தின் 9 விக்கெட்டுகளை இந்திய சுழற்பந்துவீச்சாளர்களே வீழ்த்தினர்.
இந்தியா vs ஆஸ்திரேலியா அரையிறுதிப் போட்டியும் துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இதுவரை இதுவரை 151 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா முன்னிலை வகித்துள்ளது. இது ஆஸி., அணி, 84 போட்டிகளில் வென்றுள்ளது, இந்தியா 57 போட்டிகளில் வென்றுள்ளது. 10 போட்டிகள் முடிவில்லாமல் போய்விட்டன.
நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற 63% வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேற வாய்ப்புள்ளது. அதற்கு முன், நாளைய வானிலை நிலவரம், பிட்ச் ரிப்போர்ட் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
வானிலை முன்னறிவிப்பு
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை வருவதற்கு வாய்ப்பில்லை. இருப்பினும், ஆட்டத்தின் போது 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் சற்று வெப்பமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பிட்ச் அறிக்கை
இந்தியா vs ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டிக்காக துபாய் சர்வதேச மைதானத்தில் உள்ள ஆடுகளம் மெதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க கடுமையாக விளையாட வேண்டும். மிடில் ஆர்டர் சிறப்பாக செயல்படும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். இதுவரை பார்த்தது போல, வேகப்பந்து வீச்சாளர்களை விட சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இங்கு நன்றாக இருக்கும்.
இந்தியா அணி:
ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் , ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி
ஆஸ்திரேலியா அணி:
ஸ்டீவ் ஸ்மித் , ஜோஷ் இங்கிலிஸ், டிராவிஸ் ஹெட், , மார்னஸ் லாபுசாக்னே, கூப்பர் கோனொலி, அலெக்ஸ் கேரி, க்ளென் மேக்ஸ்வெல், பென் டுவார்ஷுயிஸ், ஆடம் ஜாம்பா, நாதன் எல்லிஸ், தன்வீர் சங்கா