கடந்த வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியா,தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், போர்ட் எலிஸபெத்தில் ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டில் 6 விக்கெட்டுகளால் இன்றைய நான்காவது நாளில் வென்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா, தமது முதலாவது இனிங்ஸில் சக விக்கெட்டுகளையும் இழந்து 243 ரன்களை பெற்றது. டேவிட் வோணர் 63, கமரோன் பான்குரோப்ட் 38, டிம் பெய்ன் 36 அதிகபட்சமாக ரன்களை எடுத்தனர்.தென் ஆப்ரிக்கா தரப்பில் பந்துவீச்சில், காகிசோ ரபடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதலாவது இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 382 ரன்களை பெற்றுள்ளது.,ஏ.பி டி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 126, டீன் எல்கர் 57, ஹஷிம் அம்லா 56, வேர்ணன் பிலாந்தர் 36, கேஷவ் மஹராஜ் 30, காகிசோ ரபடா 29 ரன்களை பெற்றனர். பந்துவீச்சில், கமின்ஸ் 3, மிற்சல் மார்ஷ், ஜொஷ் ஹேசில்வூட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
தொடர்ந்து, தமது இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா, 239 ரன்களுக்கு விக்கெட்டுகளையும் இழந்தது. உஸ்மான் கவாஜா 75, மிற்சல் மார்ஷ் 45, டிம் பெய்ன் ஆட்டமிழக்காமல் 28, கமரோன் பான்குரோப்ட் 24 ரன்களையும் பெற்றனர். பந்துவீச்சில், காகிசோ ரபடா 6, லுங்கி என்கிடி, கேஷவ் மஹராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து, தமது இரண்டாவது இன்னிங்ஸில் 101 ரன்களை வெற்றியிலக்காகக் கொண்டு ஆடிய தென்னாபிரிக்கா, 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. ஏ.பி டி வில்லியர்ஸ் 28, ஹஷிம் அம்லா 27, ஏய்டன் மர்க்ரம் 21, தெனியுஸ் டி ப்ரூன் ஆட்டமிழக்காமல் 15 ரன்களை பெற்றனர். பந்துவீச்சில், நேதன் லையன் 2, பற் கமின்ஸ், ஜொஷ் ஹேசில்வூட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.இப்போட்டியின் நாயகனாக காகிசோ ரபடா தேர்வானார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…