IND vs AFG Test match :ஆப்கானிஸ்தான் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதன் முறையாக விளையாடும் ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி தனது வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியுடன் மோதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவுடன் ஆப்கானித்தான் இன்று விளையாடி வருகிறது. ஆப்கானிஸ்தானுக்கு இது முதல் டெஸ்ட் போட்டி என்பதால் வரலாற்று சிறப்புமிக்க போட்டியாகப் பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் போட்டியில் ரஷித்கான், முஜிபுர் ரஹ்மான், முகமது நபி ஆகியோர் முக்கிய வீரர்களாக திகழ்ந்ததால் இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தங்களது சுழல் பந்துவீச்சையே அதிகம் நம்பி இருக்கிறது.
இந்த போட்டியில் விராட் கோலி, காயம் காரணமாக ஆடவில்லை. இதனால் ரஹானே கேப்டனாக செயல்படுகிறார்.
I congratulate the people of Afghanistan as their cricket team plays their first international test match. Glad that they have chosen to play the historic match with India. Best wishes to both teams! May sports continue to bring our people closer and strengthen ties.
— Narendra Modi (@narendramodi) June 14, 2018
இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதன் முறையாக விளையாடும் ஆப்கானிஸ்தான் அணிக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், இந்திய அணியுடன் வரலாற்று சிறப்புமிக்க போட்டியை விளையாட ஆப்கானிஸ்தான் தேர்ந்தெடுத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விளையாட்டு போட்டியால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என பதிவிட்டுள்ளார்.