Bcci meet virat kohli [image source:x/@icc]
இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற உள்ளது. இந்தாண்டு நடைபெற உள்ள ஐசிசி டி20 உலககோப்பைக்கு முன்னதாக இந்தியா விளையாடும் கடைசி டி20 தொடர் இது என்பதால் முக்கிய வாய்தவையாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டி20 தொடருக்கான அணியில் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி என இருவருமே இடம் பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட ஓராண்டு இடைவெளிக்கு பின் இருவரும் டி20 அணிக்கு திரும்பி இருக்கின்றனர். இதனால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இருப்பினும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இந்திய வீரர்களின் செயல்பாடுகள் பொறுத்தே டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணி தேர்வு செய்யப்பட உள்ளது. இதனால், இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையேயான டி20 தொடரில் விராட் மற்றும் ரோஹித் ஆகிய இருவரின் செயல்பாடுகள் உன்னிப்பாக கவனிக்கப்படும்.
இந்தியாவில் நடக்கும் போட்டிகளுக்கு புதிய ஸ்பான்சர்கள் – பிசிசிஐ அறிவிப்பு
இந்த நிலையில், மீண்டும் இந்திய டி20 அணியில் வருவதற்கு முன்னதாக விராட் கோலியை பிசிசிஐ தேர்வாளர்கள் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், விராட் கோலியிடம் அவரது பலவீனம் குறித்து பேசி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் பின்னரே ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் இடம் பெற்று இருக்கிறார்.
இந்த சந்திப்பின்போது, சுழற் பந்துவீச்சில் வலுவாக இருக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி தன்னை யார் என்று நிரூபித்துக் காட்ட வேண்டும் என்றும் பேட்டிங்கில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவிக்க வேண்டும் எனவும் விராட் கோலியிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் குறித்து பிசிசிஐ தேர்வாளர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனிடையே, ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மான் கில் ஆகியோருடன் இதுபோன்ற விவாதம் நடந்ததா என்பது குறித்து தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…
மலேசியா : தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…
பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா…
சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…