19.4 ஓவரில் 5விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் போட்டி இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக மார்ட்டின் குபதில், டேரில் மிட்செல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய 3-வது பந்திலே புவனேஷ்குமார் ஓவரில் போல்ட் ஆனார்.
அடுத்து இறங்கிய மார்க் சாப்மேன், மார்ட்டின் கப்டில் உடன் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடினார். இருவரும் கூட்டணியில் 110 ரன்கள் சேர்ந்தது. அதிரடியாக விளையாடிய அரைசதம் விளாசி 63 ரன்கள் குவித்து 14-வது ஓவரில் 2-வது பந்தில் அஸ்வின் வீசிய சூழலில் போல்ட் ஆனார். அடுத்து இறங்கிய க்ளென் பிலிப்ஸ் அதே ஓவரில் 5-வது பந்தில் ரன் எடுக்காமல் அவுட் ஆனார். இருப்பினும் தொடக்க வீரர் மார்ட்டின் கப்டில் சிறப்பாக விளையாடிய 42 பந்தில் 4 சிக்ஸர் , 3 பவுண்டரி என மொத்தம் 70 ரன்கள் விளாசி ஷ்ரேயாஸ் ஐயரிடம் கேட்சை கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த டிம் சீஃபர்ட் 12, ரச்சின் ரவீந்திரன் 7 ரன்கள் எடுக்க இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் புவனேஷ்குமார், அஸ்வின் தலா 2, தீபக் சாஹர், சிராஜ் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
20 ஓவரில் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்க முதல் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் 15 அவுட் ஆகி வெளியேற இன்னோர் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா நிதானமாக விளையாடி 36 பந்தில் 48 ரன்கள் அடித்தார். சூரியகுமார் யாதவ் தனது அதிரடியான ஆட்டத்தால் 40 பந்துகளில் 62ரன்கள் எடுத்து போல்ட் ஓவரில் அவுட் ஆனார். ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் 5,4 ரன்களில் வெளியேற, ரிசப் பண்ட் 17 ரன்கள் அடித்து களத்தில் நின்று அணியை வெற்றி பெற செய்தார்.
இறுதியாக இந்திய அணி 19.4 ஓவரில் 5விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. தற்போது இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…