ஆஸ்திரேலியாவிற்கு சென்றடைந்த இந்திய அணி, 3 ஒருநாள், 3 டி-20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளை விளையாடவுள்ளது.
ஐபிஎல் தொடர் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
இதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பங்கேற்ற இளம் வீரர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். ஆயினும், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா அணியின் இடம்பெறாதது, ரசிகர்களிடையே பெருமளவில் ஏமாற்றத்தை அளித்தது. அதனைதொடர்ந்து அவர், டெஸ்ட் தொடர்களில் ஆடுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள், நேற்று இரவு துபாயில் இருந்து புறப்பட்டு, ஆஸ்திரேலியா சென்றடைந்தனர். அதன்படி ஒருநாள் போட்டி, 27ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதனைதொடர்ந்து நடைபெறவுள்ள டி-20 தொடர், டிசம்பர் 4ஆம் தேதி 11ஆம் தேதி நடைபெறும் எனவும், நான்கு டெஸ்ட் போட்டிகள் டிசம்பர் 17ஆம் தேதி முதல் ஜனவரி 19ஆம் தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்டது.
வீரார்கள் ஆஸ்திரேலியா வந்தடைந்ததும், சிட்னி நகரில் இருக்கும் தனிப்படுத்தும் முகாமில் தங்கவைக்கப்படுவர். அதன்பின் நடத்தப்படும் கொரோனா பரிசோதனையின் முடிவுகள் “நெகட்டிவ்” என வந்தால், அவர்கள் அடுத்த நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்.
மேலும், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, பகல் – இரவு ஆட்டமாக அடிலைட் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்குப் பின் விராட் கோலி இந்தியா திரும்பவுள்ளதால், அவருக்கு பதிலாக ரோஹித் ஷர்மா அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்பார்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…