இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை போட்டியில் ஜூன் 16-ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் இரு அணிகளும் மோதும் போட்டி மான்செஸ்டரில் மோதுகின்றன. இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாத குழு ஜெய்ஷ்-இ-முகமது இருந்தது. இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 40 சிஆர்பிஎப் இராணுவ வீரர்கள் தங்களது உயிர்களை இழந்தனர்.
இந்த தாக்குதலிற்கு பிறகு இந்திய மக்கள் அனைவரும் பாகிஸ்தான் நாட்டின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். ஏற்கனவே கடந்த ஆறு ஏழு வருடங்களாக பாகிஸ்தான் இந்தியா இடையேயான கிரிக்கெட் தொடர் நடைபெறுவது தடைபட்டது. ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் மோதிக் கொண்டன.
இந்நிலையில் ஐசிசி நடத்த போட்டிகளிலும் இந்தியா பாகிஸ்தான் அணி மோதக் கூடாது என அதன் உறுப்பினர்களிடம் இந்தியா தற்போது கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு பதிலளித்த ஐசிசி அமர்வு, “இது இனி சாத்தியமில்லை. உலக கோப்பை போட்டிக்கான அட்டவணைகள் வெளியாகிவிட்டது. அனைத்து அணி உறுப்பினர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டன. இதனால் இனிமேல் ஐசிசியின் விதிமுறைகளை மீற முடியாது. போட்டியில் எந்த மாற்றமும் இல்லை” என திட்டவட்டமாக தெரிவித்தது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…