இந்தியா – இலங்கை அணிகளிடையே நேற்று நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின், லீக் ஆட்டம் மழை காரணமாக தாமதமாகத் தொடங்கியது.ஒரு ஓவர் குறைக்கப்பட்டு தலா 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர். டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 19 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்தது. மெண்டிஸ் 38 பந்தில் 55 ரன் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். 153 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.
ரோகித் சர்மா 11, தவான் 8 ரன், சுரேஷ் ரெய்னா 27 ரன் (2 பவுண்டரி, 2 சிக்சர்), கே.எல் ராகுல் 18 ரன் எடுத்தனர். அதன்பின் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் ஜோடி சிறப்பாக விளையாடியதால் இந்தியா 17.3 ஓவரில் 153 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மணிஷ் பாண்டே 42 ரன், தினேஷ் கார்த்திக் 39 ரன் எடுத்தனர். முதல் லீக் ஆட்டத்தில் வென்ற இலங்கைக்கு இந்த வெற்றி மூலம் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…