ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியின் ஆல்-ரவுண்டர் ஆன சுனில் நரேன் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.
நேற்று ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரரான சுனில் நரேன் தனி ஒருவராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் வெறும் 56 பந்துகளில் 109 ரன்கள் எடுத்திருந்தார் அதில் 13 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடங்கும்.
இவரது அதிரடி சதத்தால் கொல்கத்தா அணி 224 என்ற இமாலய இலக்கை ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயித்தது. மேலும், சுனில் நரேன் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளையும் எடுத்திருந்தார். அவர் 4 ஓவர் பந்து வீசி 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். சுனில் நரேன், துருவ் ஜுரேல் மற்றும் ஆக்ரோஷமாக சிக்ஸர்கள் விளாசி கொண்டிருந்த ரோவ்மேன் போவெல் போன்ற ராஜஸ்தான் அணியின் முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
மேலும், ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஆன சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா பந்து வீச்சில் இதே சுனில் நரேனிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்து இருப்பார். இதன் மூலம் ஒரு வீரராக சுனில் நரேன் ஐபிஎல் தொடரில் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார். அதாவது ஒரு வீரராக விளையாடிய ஒரே போட்டியில் சதம் விளாசியதுடன், 2 விக்கெட்டுகள் கைப்பற்றி மேலும் ஒரு கேட்ச்சையும் பிடித்துள்ளார்.
இதனால் இது புதிய ஐபிஎல் சாதனையாக ஐபிஎல் தொடரில் பதிவாகி உள்ளது. நேற்றைய போட்டியில் ஒரு வேளை கொல்கத்தா அணி வெற்றி பெற்றிருந்தால் சுனில் நரேன் ஆட்டநாயகன் விருதை பெற்றுருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் இறுதியில் த்ரில் வெற்றியை ராஜஸ்தான் அணி பதிவு செய்ததோடு ஆட்டநாயகன் விருதாயு பட்லர் தட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…