2019 தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா.? இன்று நியூசிலாந்து அணியுடன் பலப்பரீச்சை.!

IND vs NZ

IND vs NZ: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்றுத் தொடங்கவிருக்கிறது. இதில் முதல் அரையிறுதி போட்டியானது இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் லீக் போட்டியில் தோல்வியை சந்திக்காத இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் நேருக்கு நேர் மோதுகிறது.

இந்த இரண்டு அணிகளும் ஏற்கனவே இதேபோல அரையறுதி போட்டியில் நேருக்கு நேர் மோதி உள்ளன. அதன்படி, கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடியது. அந்த போட்டியில் எதிர்பாராத விதமாக நியூசிலாந்து அணி இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

உலகக்கோப்பைக்கான பரிசுத் தொகை அறிவிப்பு… தோற்கும் அணிக்கும் பல கோடி..!

அன்றிலிருந்து இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டியானது நிலையை வருகிறது. அந்த போட்டியை இன்று இந்திய அணி முடித்து வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் இந்த தொடரில் விளையாடிய 9 லீக் போட்டிகளில் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்கவில்லை.

இந்த இரு அணிகளும் இதுவரை 117 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 59 முறை இந்தியாவும், 50 முறை நியூஸிலாந்தும் வெற்றி பெற்றுள்ளது. 10 போட்டிகள் முடிவுகள் இல்லாமல் முடிந்துள்ளன. அதேபோல ஒருநாள் உலகக்கோப்பையில் 10 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. அதில் வியக்கத்தக்க வகையில் 5 முறை நியூசிலாந்து அணி வென்றுள்ளது. இந்தியா 4 போட்டிகளில் வென்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் உள்ளது.

இந்திய ஜெர்ஸியை அணிந்து வாழ்த்து தெரிவித்த கால்பந்து வீரர் தாமஸ் முல்லர்.!

இதனால் இன்றைய போட்டியில் வெற்றியை அடைவதற்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்காகவும், நியூசிலாந்து அணியை வீழ்த்துவதற்காகவும் இந்திய அணி இன்று களமிறங்குகிறது. நேற்றைய பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணி வீரர்கள் கடுமையான பயிற்சியை மேற்கொண்டனர். மேலும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்த அரையிறுதிப் போட்டியானது நடைபெற உள்ளதால் இந்திய அணிக்கு சாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்