டி-20 உலகக்கோப்பையில் நேற்று ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் போட்டியில் நடுவரின் கவனக்குறைவால் 5 பந்துகள் மட்டுமே ஒரு ஓவரில் வீசப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகளில் முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்று ஆஸ்திரேலியா வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்தொண்டது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.
ஆனால் இந்த போட்டியில் நடுவரின் கவனக்குறைவால்,ஆட்டத்தின் நான்காவது ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டு ஓவர் முடிந்ததாக சொல்லப்பட்டது. நவீன் வீசிய அந்த ஒவரின் போது டேவிட் வார்னர் மற்றும் மிட்சேல் மார்ஷ் ஆடிக்கொண்டிருக்கும்போது முதல் இரண்டு பந்துகளிலும் இருவரும் 1 ரன் எடுத்தனர், மூன்றாவது பந்தில் மார்ஷ் ஒரு பௌண்டரி எடுத்தார், நான்காவது பந்தில் ஓவர்த்ரோ முறையில் 3 ரன்கள் ஓடப்பட்ட நிலையில் 5 ஆவது பந்து டாட் பால் ஆக 6 ஆவது பந்து வீசப்படாமல் ஓவர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் ரன் ரேட் முக்கிய பங்காற்றும் வகையில் ஒவ்வொரு பந்தும் ஆஸ்திரேலியாவுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் 20 ஓவர்களில் அந்த அணி ஒரு பந்து குறைவாகவே விளையாடியிருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய இழப்பாகவே இருக்கும்.
நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி, இன்று நடைபெறும் இங்கிலாந்து-இலங்கை ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்,மேலும் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் இலங்கையை வென்றால், அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…