அதே மிரட்டல் அடி சம்பவம்., ராஜஸ்தானை துவம்சம் செய்த ஹைதிராபாத்!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதிராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்துள்ளது.

ஹைதிராபாத் : இன்று, (மார்ச் 23) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2025 தொடரின் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் மோதுகின்றன. இப்போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்த்து. கடந்த முறை ஐபிஎல் சீசனில் அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் போன ஹைதிராபாத் அணி இந்த முறையும் அதனை தொடருமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
அதற்கு ஆம், எனும் பதில் அளிக்கும் விதமாகவே ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை வரும் அதனை SRH வீரர்களும் துவம்சம் செய்ய தொடங்கினர். பவர்பிளேயில் (முதல் 6 ஓவர்கள்) SRH அணி அதிரடியாக விளையாடி ஒரு விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது. அபிஷேக் சர்மா 24 ரன்னில் அவுட் ஆகினார். டிராவில் ஹெட் 31 பந்துகளில் 9 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் விளாசி 67 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார்.
அப்போது களமிறங்கிய இஷான் கிஷான் இந்த போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடினார். 47 பந்துகளில் 11 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் விளாசி 106 ரன்கள் எடுத்தார். முதல் போட்டியியலயே சதம் விளாசி அசத்தினார். நிதிஷ்குமார் 30, க்ளாஸன் 34 ரன்களில் அவுட் ஆகினர். இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது.
நடப்பு ஐபிஎல்-ல் அதிபட்ச டீம் ரன் எனும் சாதனையை படைத்துள்ளது (இன்னும் நிறைய போட்டிகள் மீதமுள்ள்ளன). நடப்பு ஐபிஎல்-ன் முதல் சதத்தை பதிவு செய்துள்ளார் இஷான் கிஷான். 20 ஓவரில் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது.