“பத்திகிச்சு இரு ராட்ச்சஸ் திரி”! துவைத்தெடுத்த கில் – சாய்! லக்னோவுக்கு இது தான் டார்கெட் !
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் எடுத்துள்ளது.

லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பமே அதிரடியாக தொடங்கியது என்று சொல்லலாம்.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாய் சுதர்சன் 56, சுப்மன் கில் 60, இருவரும் சிறப்பாக விளையாடி 12 ஓவர்கள் வரை விக்கெட் விடாமல் விளையாடினார்கள். அதன்பிறகு 12-வது ஓவருக்கு பிறகு தான் விக்கெட்களை குஜராத் விட தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆட்டமிழந்தபோது குஜராத் அணி 13.1 ஓவர்களில் 122 ரன்கள் எடுத்திருந்தது.
இருவரும் அணிக்கு தேவையான நல்ல தொடக்கத்தை கொடுத்துவிட்டு சென்ற காரணத்தால் அதற்க்கு அடுத்தாக வரும் வீரர்கள் சிறப்பாக விளையாடி நல்ல டார்கெட் வைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு பிறகு வந்த ஜோஸ் பட்லர் 16, வாஷிங்டன் சுந்தர் 2 இருவருமே சீக்கிரம் அட்டமிழந்து வெளியேறிய காரணத்தால் குஜராத் சற்று தடுமாறியது.
இருப்பினும் அவர்களுக்கு பிறகு ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான் இருவருமே சிறந்த ஹிட் பேட்ஸ்மேன்கள் என்கிற காரணத்தால் அவர்கள் மீது நம்பிக்கை இருந்தது. நம்பிக்கை வைத்தது போலவே நிதானம் கலந்த அதிரடியுடன் ரூதர்ஃபோர்ட் (22) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்கு அடுத்ததாக வந்த திவாட்டியா (o) ரன்கள் எடுத்து வெளியேற அவருக்கு அடுத்ததாக ரஷித்கான் வந்தார்.
அவர் வரும் போது கடைசியாக 2 பந்துகள் மட்டுமே மீதமிருந்த நிலையில், 1 பந்தில் சிக்ஸர் விளாச நினைத்து தூக்கி அடித்தார். ஆனால் போதிய அளவு பந்து செல்ல்லாத காரணத்தால் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது. அடுத்த பந்தில் 2 என கிடைத்தது. எனவே, அவர் 4 ரன்கள் ஷாருக்கானும் (11) ரன் என கடைசி நேரத்தில் நிதானமாக விளையாடிய காரணத்தால் சுமாரான ரன்களும் கிடைத்தது.
கடைசி நேரத்தில் சற்று தடுமாறிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. குஜராத் 180 ரன்கள் எடுத்துள்ள நிலையில், அடுத்ததாக 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கவுள்ளது. மேலும், லக்னோ அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக சிறப்பாக பந்துவீசி ரவி பிஷ்னோய் 2, ஷர்துள் தாகூர் 2 விக்கெட்களையும், வீழ்த்தினார்.