#INDvENG : 436 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்திய அணி!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து 246 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணியை தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்கிஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 119 ரன்களை குவித்து இருந்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 76 ரன்களை குவித்து அவுட் ஆகாமல் இருந்தார். அதன்பிறகு, இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் சுப்மன் கில் அவுட் ஆனார். அதைப்போல ஜெய்ஸ்வால் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
INDvsENG : இந்தியா அதிரடி! இரண்டாம் நாள் முடிவில் 175 ரன்கள் முன்னிலை!
பின் களமிறங்கிய கே.எல்.ராகுல் 80 ரன்கள் எடுத்த பிறகு தான் ஆட்டத்தை இழந்து வெளியேறினார். ஷ்ரேயாஸ் ஐயர் 35 ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறினார்.ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடி 80 ரன்களை குவித்து களத்தில் இருக்கிறார். அவருடன் அக்சர் படேலும் 35 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார். இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 110 ஓவருக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் எடுத்து. இதன் மூலம் இந்தியா 175 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.
இப்படியா ரன் அடிப்பீர்கள்… சுப்மான் கில்லை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!
இந்த நிலையில், இன்று (ஜனவரி 26)-ஆம் தேதி மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், இந்தியா அணியில் விக்கெட் தொடர்ச்சியாக விழுந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் அட்டகாசமாக விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜா 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியாக 121 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்கிஸில் 436 ரன்களை குவித்தது.
இந்தியா 190 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து அடுத்ததாக இங்கிலாந்து அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. மேலும், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில், ஜோ ரூட் 4 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.