இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் இங்கிலாந்து அணியில் களமிறங்கிய சாக் க்ராலி 20, பென் டக்கெட் 35 ரன் எடுத்தனர். அடுத்ததாக ஒல்லி போப் 1 ரன்கள், ஜோ ரூட் 29, ஜானி பேர்ஸ்டோவ் 37 ரன்கள் எடுத்தனர். பென் ஃபோக்ஸ் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ச்சியாக விக்கெட் விழுந்த காரணத்தால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்கிஸிலே தடுமாறியது.
இருப்பினும், கேப்டன் ஸ்டோக்ஸ் களத்தில் நின்று கொண்டு 70 ரன்கள் குவித்தார். இறுதியாக இங்கிலாந்து அணி 64.3 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அதிகபட்சமாக முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் ஸ்டோக்ஸ் 70, பேர்ஸ்டோவ் 37, டக்கெட் 35, ரன்கள் எடுத்துள்ளனர்.
அதனை போலவே, இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில், ரவீந்திர ஜடேஜா 3, அஷ்வின் 3, அக்சர் படேல் , பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்கள். இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் 246 ரன்கள் எடுத்து இருக்கும் நிலையில், இந்திய அணி அடுத்ததாக தங்களுடைய முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்கள்.
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…