ஐபிஎல் 2024 : கோலியின் அதிரடியில் … கொல்கத்தா அணிக்கு 183 ரன்கள் இலக்கு ..!!

ஐபிஎல் 2024 : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியும் மோதுகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.  தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலியும், பாஃப் டு பிளெசீயும் களமிறங்கினர். எதிர்பாராத விதமாக பாஃப் டு பிளெசீ 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஃபார்மில் இருந்த விராட் கோலி கொல்கத்தா அணி பந்து வீச்சை பவுண்டரிகள் பறக்க விட்டார்.

அவருடன் கேமரூன் கிரீனும் பொறுப்புடன் விளையாடனார், இதனால் பெங்களுரு அணி ஸ்கோர் உயர தொடங்கியது. களத்தில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி அரை சதத்தை பூர்த்தி செய்தார். ஆனாலும், மற்ற வீரர்களின் மெதுவான ஆட்டத்தால் பெங்களூரு அணியின் ஸ்கோர் கூடினாலும் உயராமலே இருந்தது.

பெங்களூரு அணியில் அதிரடி காட்டுவார் என களமிறங்கிய மேக்ஸ்வெல்லும் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் தனி ஒரு ஆளாக நின்று விராட் கோலி ஆட்டமிழக்காமல் ஆர்சிபி ஸ்கொரை உயர்த்தி கொண்டிருந்தார். இறுதி கட்டத்தில் தினேஷ் கார்த்திக்கும் விராட் கோலியுடன் அதிரடி காட்ட பெங்களூரு அணி நல்ல ஸ்கொரை பதிவு செய்தது.

இறுதியில், 20 ஓவருக்கு பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் விராட் கோலி 58 பந்துகளுக்கு 83* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணியில் ஹாஷித் ராணாவும், ரஸ்ஸல்லும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதன் மூலம் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்று பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது கொல்கத்தா அணி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Free bus for men - Minister Sivasankar says
Rajat Patidar fined
Governor RN Ravi - Supreme court of India - TN CM MK Stalin
AA22xA6
mk stalin - RN RAVI