Trent Bolt [fileimage]
RRvsLSG : ஐபிஎல் தொடரில் 4-வதாக நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கும், லக்னோ அணிக்கும் இடையே இன்று மாலை நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்த ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான், லக்னோ அணிக்கு 194 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதன் பின் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் விக்கெட்டை இழந்து தடுமாறினர். அதை தொடர்ந்து களமிறங்கிய தேவதூத் படிக்கல், ட்ரெண்ட் போல்டின் பந்தை எதிர்கொண்டார்.
அப்போது 3-வது ஓவரின் முதல் பந்தை பவுன்சராக வீசிய போல்ட் பந்தை எதிர்கொண்ட படிக்கலின் ஹெல்மெட்டை வேகமாக வந்து தாக்கியது. பந்து வந்து தாக்கிய வேகத்தில் படிக்கலின் ஹெல்மெட்டில் இருக்கும் பெல்ட் போன்ற அமைப்பு கீழே விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரது தலைக்கு எதுவும் ஆகவில்லை. அதை தொடர்ந்து அடுத்த பந்திலேயே படிக்கல், போல்டின் பந்தில் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.
இதற்கு பிறகும் ட்ரெண்ட் போல்ட் கே.எல் ராகுலுக்கு, 5-வது ஓவரின் 3-வது பந்தில் வீசிய பவுன்சர் அதே போல வேகமாய் ராகுலின் ஹெல்மெட்டில் வந்து தாக்கியது. ஆனால், அவரது தலைக்கும் எதுவும் ஆகாமல் அவர் தப்பித்தார். தொடர்ந்து நடந்த இந்தப் போட்டியை ராஜஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…