“பராசக்தி ஹீரோ டா.. நாங்க திரும்பி வருவோம்” தமிழில் பேசி அசத்தும் தாஹிர்!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேஜிக் பவுலர் இம்ரான் தாஹிர், அஸ்வினுடன் இணைந்து தமிழில் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் முன்னணி அணியான விளங்குவது, சீனியர் வீரர்களை கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதில் ரெய்னா, ஹர்பஜன் சிங் தொடரில் இருந்து விலக, காயம் காரணமாக தற்பொழுது பிராவோவும் விளக்கினார். இது, சென்னை அணிக்கு பெரும் தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் தோல்வியால் சென்னை அணி பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. அடுத்த விழாவும் இணைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணி பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெரும். இந்த அணியின் அற்புத பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர், ஐபிஎல் 2020-ல் சென்னை அணி விளையாடிய 10 போட்டிகளில் ஒன்றில் கூட விளையாடவில்லை.
தாஹிரின் மேஜிக் பந்துவீச்சில் இரண்டு வருடம் சென்னை இறுதி போட்டிக்கு சென்றது. அதில் ஒரு வருடம் கோப்பையை தட்டி சென்றது. அந்த சமயங்களில் இம்ரான் தாஹிர்தான் மேட்ச் வின்னராக இருந்ததை நாம் அறிந்தோம். தற்பொழுது பிராவோ விலகிய நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் தாஹிர் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் பாட்டில் கொண்டு செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாக, விளையாடும் வீரர்களின் வரிசையில் இருப்பேனோ இல்லையோ, எனது ஆதரவு எப்போதும் சென்னை அணிக்கு இருக்கும்” என விளக்கமளித்தார். இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினின் யூ-டியூப் சேனல்க்கு பேட்டியளித்த தாஹிர், தனது வாழ்க்கை குறித்த பல தகவல்களை பகிர்ந்தார்.
மேலும், அவரிடம் அஸ்வின் தமிழில் நடிகர் ரஜினியின் வசனங்கள் மற்றும் சில தமிழில் வார்த்தைகளை கூற, அவருக்கும் அதற்கு பதிலளித்தார். குறிப்பாக, “எடுடா வண்டிய, போடுடா விசில” எனும் வசனமும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் “பராசக்தி ஹீரோ டா” “நாங்க திரும்பி வருவோம்” என பேசியது, இணையத்தில் அதிகளவில் பரவிவருகிறது.