தோல்விக்கு நடுவிலும் சாதித்த தாஹிர்-சாம் ஜோடி!
ஐபிஎல் 2020 தொடரானது அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதியது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி படுதோல்வியை தழுவியது. மேலும் நேற்றைய ஆட்டத்தில் 71 ரன்கள் மட்டுமே எடுத்து 8 விக்கெட்டை இழந்து தடுமாறி நின்ற போது சாம் கரண் இம்ரான் தாஹிர் ஜோடி அணியை மீட்டு கொண்டு வந்தனர்.
இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்தது. இதன் மூலமாக ஐபிஎல் போட்டியில் 9-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் கேப்டன் தோனி-அஸ்வின் ஜோடி, 2013 ஆண்டிலும், பிரவோ-இம்ரான் தாஹிர் ஜோடி 2018-லும் தலா 41 ரன்கள் எடுத்ததே சாதனையாக கருத்தப்பட்டது. இந்நிலையில் இவர்களின் சாதனையை சாம்-தாஹுர் இணை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.