“எல்லா நேரத்திலும் மாஸ்க் அணிய முடியாது” – சவுரவ் கங்குலி…!

Default Image

இந்திய அணியினர் இருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில்,எல்லா நேரத்திலும் மாஸ்க் அணிவது உடல் ரீதியாக முடியாது என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.இதன் முதல் டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த போட்டிகள் தொடங்க சிறிது காலம் இருப்பதால்,வீரர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில்,இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான யூரோ 2020 போட்டியின் போது லண்டனில் உள்ள வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியைக் காண ரிஷப் பந்த் தனது நண்பர்களுடன் சென்றிருந்தார்.அதுமட்டுமல்லாமல்,மாஸ்க் அணியாமல் ரசிகர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.மேலும்,ரசிகர்களுக்கு செல்பி எடுக்கவும் அனுமதி கொடுத்துள்ளார் என்று சர்ச்சை எழுந்தது.

இதற்கிடையில்,இந்திய அணியை சேர்ந்த இருவருக்கு கொரோனா லேசான அறிகுறிகள் இருப்பதுதெரிய வந்தது. இதனையடுத்து,பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றோருவருக்கு நெகட்டிவ் என்றும் பரிசோதனை முடிவு வெளியாகியுள்ளது.கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட வீரர்ர் ரிஷப் பந்த் என பின்னர் தெரிய வந்தது.

இந்நிலையில்,இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவர் சவுரவ் கங்குலி கூறியதாவது :”இங்கிலாந்தில் யூரோ கோப்பை கால்பந்து போட்டி மற்றும் விம்பிள்டன் போட்டிகளும் நடைபெற்றது.இந்த போட்டிகளை காண்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும்,இந்திய வீரர்கள் விடுப்பில் இருந்ததால்,அப்போட்டிகளை காண சென்றுள்ளனர்.எல்லா நேரத்திலும் மாஸ்க் அணிவது உடல் ரீதியாக முடியாது,அதனால் இந்த விஷயத்தை பெரிதாக்க வேண்டாம்”, என்று கூறினார்.

டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக இந்திய அணி டர்ஹாம் நகருக்குச் சென்று, ஜூலை 20 முதல் மூன்று நாள் பயிற்சிப் போட்டியில் விளையாட உள்ளது.ஆனால்,ரிஷப் பந்த் மற்றும் அணியின் பயிற்சி உதவியாளரும்,பந்து வீச்சாளருமான தயானந்த் கரானி ஆகியோர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதன் காரணமாக டர்ஹாமிற்கு பயணிக்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்