எனக்கு 50 வயது இல்லை..நான் 25 வயது இளைஞன்…சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி பதிவு.!!

Sachin Tendulkar

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி தன்னுடைய 50-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர்.

Sachin
Sachin [Image Source : Twitter/ @CrickeTendulkar ]

குறிப்பாக ரசிகர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் என அழகாக எடிட் செய்து கிரிக்கெட் கடவுளுக்கு தங்களுடைய வாழ்த்துக்கள் என பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் சச்சின் டெண்டுல்கர் பெயரை ட்ரெண்டிங்கில் வைத்திருந்தார்கள்.

Sachin Tendulkar World Cup
Sachin Tendulkar World Cup [Image Source : Reuters]

இந்த நிலையில், அதற்கு நன்றி தெரிவித்துள்ள சச்சின் தனது டிவிட்டர் பக்கத்தில் ” களத்தில் வென்ற கோப்பைகளை தவிர , களத்திற்கு வெளியே உள்ள நட்புகளும் வாழ்க்கையை சிறப்புறச் செய்கின்றன. உங்கள் அன்பையும் பாசத்தையும் இவ்வளவு ஏராளமாகப் பெறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

நீங்கள் அனைவரும் எனக்கு அனுப்பிய அனைத்து அழகான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் செய்திகள் மூலம் நான் பெற்ற அரவணைப்பை விளக்க எனக்கு வார்த்தைகள் இல்லை. வாழ்த்துக்களுக்கு அனைவருக்கும் நன்றி. எனக்கு 50 வயது இல்லை – 25 வருட அனுபவமுள்ள 25 வயது இளைஞன்” என பதிவிட்டுள்ளார்.  சச்சினின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்