ஹர்பாஜன் சிங்கின் ஆதங்கத்திற்கு பதிலளித்த சச்சின் டெண்டுல்கர்.
ஐசிசி ட்விட்டர் பக்கத்தில், செவ்வாய்க்கிழமை அன்று சச்சின் – கங்குலி பார்ட்னர்ஷிப் இணை தான் இதுவரை அதிகம் ரன்கள் சேர்த்தது என்ற தகவலைப் பகிர்ந்திருந்தது. இந்த பகிர்வை பார்த்த சச்சின், புதிய விதிகள் இருந்திருந்தால் இன்னும் எவ்வளவு எடுத்திருப்போம் என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த கங்குலி, இன்னும் 4000 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்கலாம் என கூறியுள்ளார்.
தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் புதிய விதியின்படி, ஒரு ஆட்டத்தில் இரண்டு புதிய வெள்ளைப் பந்துகளைப் பயன்படுத்தலாம். அதேபோல மூன்று பவர் ப்ளேக்களைப் பின்பற்ற வேண்டும். முதல் பவர் ப்ளேவில் 30 கஜ வட்டத்தைத் தாண்டி இரண்டு ஃபீல்டர்கள் மட்டுமே இருக்கலாம். 11-40 ஓவர்கள் வரை 4 ஃபீல்டர்கள் மட்டுமே இருக்கலாம். கடைசி 10 ஓவர்களில் ஐந்து ஃபீல்டர்கள் இருக்கலாம்.
சில வருடங்களாகவே, இந்த புதிய ஒருநாள் போட்டி விதிகளை, சச்சின் டெண்டுல்கர் விமர்சித்து வருகிறார். அவர் கூறியதாவது, இப்படி இரண்டு புதிய பந்துகள் ஒருநாள் போட்டியில் பயன்படுத்தப்பட்டால் அது பவுலர்களுக்கு அழிவுக்காலம் என்றும், பந்துகள் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதையே பார்க்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஹர்பஜன் சிங், சச்சின் – கங்குலி உரையாடலுக்கு பதில் போட்டிருந்தார். அவர் கூறியதாவது, “கண்டிப்பாக எளிதாக இன்னும் சில ஆயிரம் ரன்கள். இது ஒரு மோசமான விதி. ஐசிசியில் சில பந்துவீச்சாளர்களும் இடம்பெற்றால்தான் பேட்டிங்குக்கும் பவுலிங்குக்கும் சம அளவு முக்கியத்துவம் இருக்கும். 260/270 என்று எடுத்தால் தான் போட்டி விறுவிறுப்பாக இருக்கும். இப்போதெல்லாம் அணிகள் மிக எளிதாக 320/30 என்று எடுத்து அந்த இலக்கு வெற்றிகரமாக விரட்டப்படுகிறது” என தனது மன ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, ஹர்பஜன் சிங்கிற்கு பதிலளித்த டெண்டுல்கர், ‘நீங்கள் சொன்னதை ஆமோதிக்கிறேன் பஜ்ஜி. இந்த விதிகள், ஆடுகளங்கள் இரண்டையுமே சரிபார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும்) தொடங்கி நடைபெற்று வருகிறது. …
கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது கடலூருக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு முடிவுற்ற மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் …
சென்னை : இன்று திரைக்கு வந்துள்ள, தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : 'எந்திரன்' திரைப்படத்தின் காப்புரிமை தொடர்பாக இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது திரைத்துறையில்…
சென்னை : நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை கடந்த 2018 பிப்ரவரி மாதம் 21இல் ஆரம்பித்தார்.…