Jadeja [file image]
ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா பேசி இருந்தார்.
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் சென்னை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காக ஜடேஜா தனது பந்து வீச்சின் மூலம் கொடுத்திருந்தார்.
இதனால் நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் அவர் வென்றிருந்தார். அதை தொடர்ந்து போட்டி முடிந்த ஆட்டநாயகன் விருதை பெற்ற பிறகு அவர் பேசி இருந்தார். அவர் பேசுகையில், “நான் எப்போதும் இந்த மைதானத்தில் பந்து வீசும் போது அந்த நேரங்களை ரசிக்கிறேன், இதனால் மேலும் பந்து வீச விரும்புவேன். பேட்ஸ்மேன்களுக்கு கடினமான பந்துகளை வீசுவதே எனது திட்டமாக இருந்தது.
நான் இங்கு நிறைய பயிற்சி செய்துள்ளேன், இந்த பிட்சில் நீங்கள் நல்ல இடங்களில் பந்துவீசினால் அது நிச்சயமாக உங்களுக்கு உதவும். மேலும், இந்த மைதானத்தில் புதிதாக வருகை தரும் அணிகள் பிட்சின் போக்கை கணிக்க சிறுது நேரம் எடுப்பார்கள். அதுதான் உங்களுக்கான நேரம்.
அதே போல தான் இன்றும் நடந்தது அந்த நேரத்தை பயன்படுத்தி நீங்கள் புதிதாக திட்டமிட்டு அவர்களை இந்த சூழ்நிலைக்கு திரும்பி விளையாடாதவாறு நீங்கள் பந்து வீச வேண்டும். அதை தான் இன்று நான் செய்தேன்”, என்று ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு ரவீந்திர ஜடேஜா பேசி இருந்தார்.
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…