உங்களிடம் 6 சூர்யகுமார் யாதவ் இருந்தால் அவர்கள் அனைவரையும் எனது அணிக்கு வைத்துக்கொள்வேன் என்று டாம் மூடி கூறியுள்ளார்.
தற்போது சூப்பர் ஃபார்மில் விளையாடிக்கொண்டிருக்கும் சூர்யகுமார் யாதவ், தனது அற்புதமான 360 ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். முன்னாள் இந்நாள் கிரிக்கெட்டர்கள் பலரும் அவரது சிறப்பான ஆட்டத்தை புகழ்ந்து வருகின்றனர். இதேபோல் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் டாம் மூடி, புகழ்ந்து பேசியுயள்ளார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் உலகின் நம்பர் 1 டி-20 கிரிக்கெட்டரான சூர்யகுமார், இந்த டி-20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்துக்கு எதிராக 51* ரன்கள், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 68 ரன்கள், மற்றும் ஜிம்பாப்வேவிற்கு எதிராக 51* ரன்கள்(25 பந்துகளில்) என இந்த உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
சூர்யகுமாரின் பேட்டிங்கை “360 டிகிரி பிளேயர்” என பாராட்டி வரும் டாம் மூடி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவரை டாப் ஆர்டரில் இறங்க வேண்டுமா? எனக் கேட்டதற்கு அவர் மௌனமாக இருந்து விட்டார், எந்த இடத்தில் இறங்கினாலும் சிறப்பாக விளையாடுவர் என்பதில் சந்தேகமில்லை இருந்தாலும், சூர்யகுமார் 4 ஆவது இடத்திலேயே மிகவும் பொறுத்தமாக இருப்பார் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, உங்களிடம் 6 சூர்யகுமார் யாதவ் இருந்தால் அவர்கள் அனைவரையும் நான் என் அணியில் எடுத்துக்கொள்வேன், தற்போது சூர்யகுமார் இருக்கும் ஃபார்முக்கு, அவரது அதிரடியான ஸ்ட்ரைக்ரேட் பொறுத்து இந்தியா மிகப்பெரிய ஸ்கோரை எட்டும்.
இந்த வருடத்தில் 28 இன்னிங்சில் 1026 ரன்கள் குவித்துள்ள சூர்யகுமார் அதிகபட்ச ரன்கள் குவித்த வீரராக இருக்கிறார். ஒரே ஆண்டில் 1000 ரன்களைக் குவித்த இரண்டாவது வீரராக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக டி-20 களில், 39 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சூர்யகுமார் 1270 ரன்களுடன் 42.33 சராசரியுடன் 12 அரைசதம் மற்றும் ஒரு சதத்தை பதிவு செய்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…