நீங்களே உண்மையாக இருந்தால் எதற்கும் அஞ்சமாட்டீர்கள்.! விராட் கோலி..!

Default Image

வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு “நீங்களே உண்மையாக இருந்தால், நீங்கள் எதற்கும் அஞ்ச மாட்டீர்கள்” என்று பதிவு செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு விளம்பரங்களில் நடித்ததற்காக கைது செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் ஹேமலதா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிவித்தனர்.

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு “நீங்களே உண்மையாக இருந்தால், நீங்கள் எதற்கும் அஞ்ச மாட்டீர்கள்” என்று பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

If you’re true to yourself, you won’t fear anything.

A post shared by Virat Kohli (@virat.kohli) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்