CSK : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் நேற்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான சென்னையுடன், பெங்களூரு மோதியது. பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருந்த இப்போட்டியில் முதலில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை எடுத்தது.
முதலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தனர். இதன் மூலம் 173 ரன்கள் குவிக்கப்பட்டது. இதையடுத்து ருத்ராஜ் தலைமையிலான சென்னை அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியில் சென்னை பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆட்ட நாயகன் விருதை தனது அறிமுக போட்டியிலேயே தட்டி சென்றார். பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தி இருந்தார். அதுமட்டுமில்லாமல், சென்னை அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்று உள்ள ருதுராஜ் கெய்க்வாட், தனது கேப்டன்சியில் முதல் வெற்றியை ருசித்து பயணத்தை தொடங்கியுள்ளார்.
இப்போட்டிக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது, இப்போட்டியில் ஆரம்ப முதலே ஆட்டம் எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. தொடக்கத்தில் சில ஓவர்களில் ரன்கள் கொடுத்த போதும், ஸ்பின்னர்கள் மற்றும் முஷ்தாஃபிசுர் மீண்டும் ஆட்டத்தை சிஎஸ்கே அணி பக்கம் திருப்பினர்.
மேக்ஸ்வெல் மற்றும் ஃபாஃப் விக்கெட் ஒரு பெரிய திருப்புமுனையாக இருந்தது. இன்னும் 10 முதல் 15 ரன்கள் குறைவாக கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், பெங்களூரு அணி வீரர்கள் இறுதியில் நன்றாக விளையாடினார்கள் என்றார். பின்னர் கேப்டன்சி குறித்த கேள்விக்கு, தலைமை பொறுப்பை நான் மிகவும் ரசித்தேன், மகிழ்ச்சியாக இருந்தது. அது எனக்கு கூடுதல் சுமையாக இருக்கவில்லை.
அதை எப்படி கையாள்வது என்பதில் எனக்கு அனுபவம் இருந்தது. இதனால் எந்த அழுத்தத்தையும் உணர்ந்ததில்லை, மாஹி பாயும் (எம்எஸ் தோனி) எனக்கு உதவினார். அனைவரும் நன்றாக பேட்டிங் செய்தனர். எங்கள் அணியில் உள்ள அனைவரும் நல்ல ஸ்ட்ரோக் பிளேயர்கள் என்று நான் நினைக்கிறேன்.
இருப்பினும், எங்கள் அணியில் ஒரு இரண்டு மூன்று விஷயங்களில் வேலை செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவர்களின் பாத்திரங்கள் மற்றும் எந்த பந்துவீச்சாளர்களை அடிக்க வேண்டும் என்பது தெரியும். ஆனால், முதலில் களமிறங்கிய 3 பேர், 15 ஓவர்கள் வரை தாக்கு பிடித்திருந்தால் இன்னும் சற்று சுலபமாக வெற்றி பெற்றிருப்போம் என நினைக்கிறன் என கூறினார்..
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…