Ruturaj Gaikwad [file image]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை தோல்வியடைந்ததை குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார்.
நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் 17-வது சீசனின் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும் சென்னை அணியும் மோதியது. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹைதராபாத் அணியின் பந்து வீச்சளர்கள் இந்த வெற்றியின் காரணமாக அமைத்துள்ளார்கள். சென்னை அணி இந்த தொடரில் முதல் இரண்டு வெற்றிகளை பெற்ற பிறகு, தொடர்ந்து 2 தோல்விகளை பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியில் தோல்வியடைந்ததன் காரணம் குறித்து போட்டி முடிந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார். அவர் பேசுகையில், “இது ஒரு ஸ்லோ பிட்ச், அவர்கள் கடைசி ஓவர்களில் நன்றாக பந்துவீசினார்கள். அந்த கடைசி ஐந்து ஓவர்களில் எங்களால் ரன் எடுக்க முடியவில்லை. அதே போல் போட்டியின் பாதியில் நாங்கள் நல்ல நிலையில் தான் இருந்தோம், ஆனால் அவர்களது டெத் ஓவர் பந்து வீச்சால் ரன்ஸ் கூடுதலாக எடுக்க முடியவில்லை.
கருப்பு மண் மைதானம் என்பதால் நாங்கள் பந்து வீசும் போது மெதுவாக மாறும் என்று எதிர்பார்த்தோம். அதே போல பந்து பழையதாக மாறியவுடன் அது மெதுவாக மாறியது. அவர்கள் அதனை நன்றாக பயன்படுத்தி பந்து வீசினார்கள். மேலும், நாங்கள் பவர்பிளேயில் நன்றாகப் பந்து வீசவில்லை, ஆனால் ஆட்டத்தை கடைசி வரை இழுத்துச் சென்றோம்.
ஒரு நல்ல பவர்பிளே அமைந்திருந்தால் போட்டி எங்கள் கையில் இருந்திருக்கும். மேலும், போட்டியின் கடைசி கட்டத்தில் லேசான பனி (dew) இருந்தது. அதே நேரம் தான், அதாவது 15-16 வது ஓவரிகளில் தான் மொயீன் அலிக்கு பந்து சுழன்றது, அதனால் பெரிய வித்தியாசம் எதுவும் போட்டியில் அமையவில்லை,” என்று ருதுராஜ் கெய்க்வாட் போட்டி முடிந்த பிறகு தோல்விக்கான காரணம் குறித்து விளக்கி இருந்தார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…