நல்ல தொடக்கம் அமைந்தால், கோலி நிச்சயம் சதமடிப்பார்- ஜாஃபர்
இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில், 30 ரன்களைக் கடந்து விட்டால் கோலி, இன்னொரு சதமடிப்பார் என ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி, தொடரில் ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் வென்று முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் விராட் கோலி, இந்த போட்டியில் 30 ரன்களைக் கடந்து விட்டால் சதமடிப்பார் என முன்னாள் இந்திய கிரிக்கெட்டர் வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார்.
இது குறித்து ஜாஃபர் கூறியதாவது, விராட் கோலி தற்போது நல்ல பார்மில் விளையாடிக்கொண்டிருக்கிறார். இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கோலி, தனது 45 ஆவது சதத்தை அடித்துள்ளார். மேலும் அவர் 40-50 ரன்களை அடித்துவிட்டு, தனது விக்கெட்டை அவ்வளவு எளிதில் இழக்கும் வீரர் அல்ல.
நல்ல தொடக்கம் மட்டும் அமைந்துவிட்டால் நிச்சயம் விராட்டின், கணக்கில் இன்னொரு சதமும் வந்துவிடும் என்று வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார்.