AB de Villiers [file image]
சென்னை : தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி வீரரான ஏபி டிவில்லியர்ஸ் அவரது பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களிடையே நடந்த உரையாடலில் தோனியின் ஃபார்மை பற்றி வியந்து கூறியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பெங்களூர் அணியும், சென்னை அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது அதற்கு மிக முக்கிய காரணம் ஐபிஎல் தொடரின் பிளே-ஆப் சுற்றுதான். ஏற்கனவே கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் என மூன்று அணிகள் பிளே-ஆப்க்கு முன்னேறிய நிலையில் 4-வது அணிக்காக பெங்களூர், சென்னை அணிகளுக்கிடையே போட்டிகள் நிலவி வருகிறது.
இந்நிலையில், பெங்களூர் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரும், ஐபிஎல் தொடரின் மிஸ்டர் 360 (MR.360) என்ற பெயருக்கு சொந்தக்காரருமான ஏபிடி வில்லியர்ஸ் அவரது பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுடன் இன்று நேர்காணலில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் அவரிடம் தோனியின் தற்போதைய ஃபார்மை பற்றி கூறுங்கள் என கேட்டிருந்தார்.
அதற்கு அவர் வியந்து அற்புதமான பதிலை அளித்திருந்தார். தோனியின் ஃபார்மை பற்றி டிவில்லியர்ஸ் கூறியதாவது, “அவர் ஒரு சிறந்த ஃபார்மில் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன், அவர் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன், இந்த சீசனில் அவர் விளையாடுவதை நான் அதை போதுமான அளவுக்கு பார்க்கவில்லை, அவர் போதிய போட்டியில் விளையாடுவதை பார்த்த போதும் கூட அவர் 16 பந்துகளில் 37 ரன்கள், 4 பந்துக்கு 20 ரன், மற்றும் 9 பந்துக்கு 28 என அவர் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிரடியாக பந்தை அடிக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.
மேலும், கடைசி 6 ஓவர்களில் அவரைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். இல்லை 15வது ஓவரில் கூட வரலாம் அந்த 5 ஓவர் போதும் அவர் 15 பந்தை எதிர்க்கொண்டாலே போதும் 50 ரன்கள் தாராளமாக அடிப்பார். அந்த அளவிற்க்கு இந்த ஐபிஎல் தொடரில் அவரது ஃபார்மானது இருக்கிறது”, என அந்த ரசிகருக்கு பதிலளித்து டிவில்லியர்ஸ் பேசி இருந்தார்.
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…