பார்முக்கு வாங்க ஸ்டீவன் ஸ்மித் இல்லைனா ஸ்டெம்ப் தெறிக்கும்! மேத்யூ ஹைடன் அட்வைஸ்!
ஸ்டீவ் ஸ்மித்தின் ஃபார்ம் திரும்பும் வரை பந்துவீச்சாளர்கள் அவரது ஸ்டம்புகளை குறி வைத்து தூக்குவார்கள் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
அடிலெய்ட் : பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டியிலும் ஸ்டீவன் ஸ்மித் மோசமான ரன்களில் அட்டமிழந்து வெளியேறியிருக்கிறார். ஆஸ்ரேலியா அணியின் இன்னிங்கிஸின் போது 4-வது இடத்திற்கு பேட்டிங் செய்ய வந்த ஸ்டீவன் ஸ்மித் 11 பந்துகள் எதிர்கொண்டு 2 ரன்கள் மட்டுமே எடுத்து அட்டமிழந்து வெளியேறினார்.
ஜஸ்பிரித் பும்ரா சரியாக திட்டமிட்டு லேக் சைடில் பந்துவீச அந்த பந்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தெரியாமல் ஸ்மித் திணறிய நிலையில், பந்து டிப் ஆகி கீப்பர் பண்ட்டிடம் கேட்சுக்கு சென்றது. கடந்த ஆண்டில் இருந்து ஏழு போட்டிகளில் (13 இன்னிங்ஸ்) விளையாடிய ஸ்மித் 23.20 என்ற சராசரியில் மொத்தமாக 232 ரன்களை ஒரு அரைசதத்துடன் மோசமான பார்மில் இருந்து வருகிறார்.
எனவே, இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி பழையபடி பார்முக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த போட்டியிலும் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தார். இந்நிலையில், இவருடைய பார்ம் குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” அவுட்டுவதற்கு இதை விட மோசமான வழி இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சமீப காலங்களில் தனது மோசமான பார்ம் காரணமாக அதே மன நிலையில் இருப்பதால் சரியாக விளையாடமுடியவில்லையோ என்று நினைக்கிறேன். அவர் அவுட் ஆகாமல் விளையாடவேண்டும் என்றால் பழைய பார்ம் அவருக்கு வரவேண்டும்.
அப்படி சிறப்பான பார்முக்கு அவர் திரும்பினார் என்றால் மட்டும் தான் தொடர்ச்சியாக பந்துவீச்சாளர்கள் அவரை விக்கெட் எடுப்பதில் சிரமப்படுவார்கள். அப்படி எடுக்கவில்லை என்றால் தொடர்ச்சியாக ஃபார்ம் திரும்பும் வரை பந்துவீச்சாளர்கள் அவரது ஸ்டம்புகளை குறி வைத்து பந்துவீசுவார்கள். கண்டிப்பாக அவர் பழையபடி மீண்டும் பழைய பார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கிறேன்” எனவும் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.