நானா இருந்தால் சாம் கரனை டீம்ல வைக்க மாட்டேன் ! வீரேந்திர சேவாக் ஓபன் டாக் !

Shewag : நடந்து வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் தற்போதய கேப்டனான சாம் கர்ரனை அணியில் வைக்க மாட்டேன் என சேவாக் அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனான ஷிகர் தவான் காயம் ஏற்பட்டுள்ளதால் கடந்த ஒரு சில போட்டிகளில் அவர் விளையாடுமல் இருந்தார். இதனால் அவருக்கு பதிலாக பஞ்சாப் அணியின் இளம் ஆல்-ரவுண்டரான சாம் கரன் பஞ்சாப் அணியை வழி நடத்திவந்தார். இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியுடன் ஒரு தோல்வியை சந்தித்தது பஞ்சாப் அணி.
இதனால் சாம் கரனும், பஞ்சாப் அணியும் பல கலவையான விமர்சனங்களுக்கு உள்ளாகினர். அதிலும் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் அணியின் முன்னாள் வீரருமான வீரேந்திர சேவாக், பஞ்சாப் அணியின் தற்போதையே கேப்டனான சாம் கரனின் ஃபார்ம் குறித்து அவரது கருத்தை க்ரிக்பஸ்ஸிடம் பேசி இருந்தார்.
அவர் கூறுகையில், “நான் பஞ்சாப் அணியில் இப்பொது இருந்திருந்தால் சாம் கரனை பேட்டிங் ஆல்-ரவுண்டராகவோ அல்லது பவுலிங் ஆல்-ரவுண்டராகவோ அணியில் வைத்திருக்க மாட்டேன். ஏனென்றால், ஒரு சில ரன்கள் பேட்டிங்கில் எடுத்து மற்றும் சில சொல்லும் அளவிற்கு பவுலிங் ஸ்பெல் யார் செய்தாலும் அப்படிப்பட்ட வீரரால் எந்த ஒரு பயனும் அணிக்கு இல்லை.
நீங்கள் ஒன்று பேட்டிங்கில் மட்டும் சிறந்து விளங்க வேண்டும் இல்லை என்றால் சின்ன பேட்டிங்கால் கூட போட்டியையாவது வெல்ல வேண்டும். அதே போல பந்து வீசினாலும் வெறித்தனமாக விக்கெட்டுக்காக நீங்கள் வீச வேண்டும் அல்லது பந்து வீசவே கூடாது”, என்று க்ரிக்பஸ்ஸிடம் அளித்த பேட்டியில் சேவாக் பேசி இருந்தார்.
சாம் கரன், நேற்றைய போட்டியில் 2 ஓவர் பந்து வீசி 18 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்திருந்தார். மேலும், பேட்டிங்கில் அவர் தொடக்க வீரராக களமிறங்கி வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனை கருத்தில் கொண்டு தான் விரேந்தர சேவாக் அவரை குறித்து விமர்சித்து பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025