ரோஹித் சர்மா, விராட் கோலியை நம்பி பயனில்லை.! கபில்தேவ் விமர்சனம்.!
2023ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால், ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற தனிப்பட்ட வீரர்களை நம்பி எந்த பயனுமில்லை. – கபில்தேவ்.
இந்தாண்டு 2023இல் அக்டோபர், நவம்பர் மாதத்தில் 50 ஓவர் உலகக்கோப்பை நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை வெல்வது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் தனது கருத்தை கூறியுள்ளார்.
அதில், 2023ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால், ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற தனிப்பட்ட வீரர்களை நம்பி எந்த பயனுமில்லை. வெற்றியை பெற்றுத்தரும் 5 அல்லது 6 வீரர்களை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் இந்நேரம் உருவாக்கியிருக்க வேண்டும்.’ எனவும் தனது கருத்தை முன்வைத்தார் கபில் தேவ்.