விராட் கோலியின் இடத்தில் நான் இருந்திருந்தால் இந்த முடிவை எடுத்திருப்பேன்-சோயப் அக்தர்

Published by
Muthu Kumar

2022 டி-20 உலகக் கோப்பைக்குப் பிறகு விராட் கோலி ஓய்வு பெறலாம் என்று கூறுகிறார் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர்.

கடந்த சில தினங்களுக்கு முன் ஷாஹீத் அப்ரிடி கோலியின்  ஓய்வு குறித்து பேசினார், தற்போது சோயப் அக்தரும் கோலியின் ஓய்வு பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.. அக்டோபர் 16 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில்  தொடங்கவிருக்கும் டி-20 உலகக்கோப்பை போட்டிக்குப்பின் விராட் கோலி டி-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறலாம் என்று சோயப் அக்தர் கூறியள்ளார் .

விராட் கோலி , தற்பொழுது மூன்று விதமான போட்டிகளிலும்(ஒருநாள் போட்டி  , டி-20 மற்றும் டெஸ்ட்) 100க்கும் அதிகமான போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி உள்ளார். மேலும் அவர் 104 டி-20 களில் விளையாடி 51.94 சராசரியாக பேட்டிங் செய்து மொத்தம் 3584 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் முடிவடைந்த ஆசியக்கோப்பை டி-20 போட்டியில் விராட் கோலி 276 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்தவர்களில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தார் (ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்களும் அடங்கும்). மேலும் கடினமான தனது 2 ஆண்டுகளுக்குப் பின் 71ஆவது சதத்தையும் பூர்த்தி செய்தார்.

இந்த நிலையில் விராட் கோலி மற்ற வடிவ போட்டிகளில் கவனம் செலுத்த, அவர் டி-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறலாம்  என்று சோயப் அக்தர் கூறியுள்ளார். மேலும் தான் கோலியின் இடத்தில் இருந்திருந்தால் இந்த முடிவை எடுத்திருப்பேன் என்றும் சோயப் அக்தர் கூறியுள்ளார்.

Recent Posts

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…

6 hours ago

வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…

7 hours ago

தெற்கு வங்ககடலில் புதிய காற்று சுழற்சி…கனமழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் அலர்ட்!

சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

8 hours ago

லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை-திருமாவளவன் பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

9 hours ago

FIR-ஐ வெளியிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் – தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

10 hours ago

“எனக்கு நானே சாட்டையடி கொடுக்கப் போகிறேன்” பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

10 hours ago