சென்னை : இந்தியாவில் நடைபெற இருக்கும் உள்ளூர் தொடரான துலீப் டிராபி தொடரில் நடராஜன் இடம் பெறாததைப் பற்றி அஸ்வின் பேசி இருக்கிறார். மேலும், அவர் இதைச் செய்திருந்தால் நானே அவருக்காகக் குரல் கொடுத்திருப்பேன் எனவும் அஸ்வின் கூறி இருக்கிறார்.
இந்திய அணியில் சமீப காலமாக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளில் இடது கை வேகப்பந்து வீச்சாளராக அர்ஷதீப் சிங் மற்றும் கலீல் அகமது விளையாடி வருகிறார்கள். அதிலும், கலீல் அகமது பெரிதாகத் தனது விளையாட்டை வெளிப்படுத்தாத போதும் அவருக்குத் தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து வருகிறது. ஆனால், உள்ளூர் போட்டிகள், ஐபிஎல் தொடர் எனக் கிடைக்கும் வாய்ப்பை தமிழக வீரரான நடராஜன் சிறப்பாகவே செய்து வருகிறார்.
இந்த நிலையில் வரும் செப்டம்பர்-5 ம் தேதி உள்ளூர் தொடரான துலீப் டிராஃபி நடைபெற உள்ளது. இதற்கான அணிகளைச் சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டிருந்தது. பிசிசிஐ வெளியிட்டுள்ள அந்த அணியிலும் நடராஜன் இடம்பெறவில்லை. இதனால், நடராஜனுக்கு இனிமேல் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என ரசிகர்கள் கூற தொடங்கினார்கள்.
தற்போது, இது குறித்து இந்திய அணியின் சீனியர் சுழற் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் அவரது யூட்யூப் சேனலில் பேசி இருந்தார். மேலும், நடராஜனுக்கு இதற்குப் பிறகு இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான் என்பதை மறைமுகமாகவும் தெரிவித்துள்ளார். நடராஜனைப் பற்றி அஸ்வின் கூறியதாவது, “உள்ளூர் தொடரான துலீப் டிராபி தொடர் என்பது இந்திய வீரர்கள் அனைவரையும் டெஸ்ட் தொடருக்கு தயார்ப்படுத்தும் ஒரு தொடராகும். நடராஜன் வெள்ளைப் பந்தில் ஒரு சிறப்பான பவுலர்.
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரிலும் சிறப்பாகத்தான் விளையாடினார். ஆனால், அவர் சமீப காலமாக முதல்தர போட்டிகளில் ஆடவில்லை. மேலும், கடந்த 3 ஆண்டாக அவர் ரஞ்சிக் கோப்பை, இந்திய அணிக்காக எந்த ஒரு போட்டியிலும் நடராஜன் விளையாடவில்லை. கடந்த ஆண்டு ரஞ்சிக் கோப்பை அணியில் இடம் பெற்றும் லெவன் அணியில் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
நடராஜனுக்கு எப்போதுமே எனது ஆதரவு உண்டு. அவர் மிகவும் சிறந்த வீரர், மிகச்சிறந்த மனிதர். அதனால், எதார்த்தத்தைக் கூறாமல் இருக்க முடியாது. ஒருவேளை ரஞ்சி கோப்பை தொடரில் நடராஜன் தமிழ்நாடு அணிக்காகத் தொடர்ந்து விளையாடி இருந்தால், நானே அவருக்காகக் குரல் கொடுத்திருப்பேன்”, என்று அஷ்வின் தனது யூட்யூப் சேனலில் பேசி இருந்தார். இவர் பேசியதை வைத்துப் பார்க்கையில், ‘தமிழக நடராஜன் இனி இந்திய அணிக்காக விளையாடுவது சந்தேகம் தான் எனத் தெரிகிறது’ என ரசிகர்கள் கருதுகிறார்கள்.
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…