இன்றைய போட்டியில் பிராவோக்கு பதில் இம்ரான் தாஹிர்க்கு வாய்ப்பளிக்க வேண்டுமென முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிறந்த அணியாக விளங்கும் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சீசனில் சொதப்பலான ஆட்டத்தை வெளிக்காட்டி, புள்ளிப் பட்டியலில் பின்னடைவில் உள்ளது. இதனால் சென்னை அணி மீது விமர்சனங்கள் குவியத் தொடங்கியது.
மேலும், இன்றைய போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவினால், தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப்ஸ் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது. இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பிராட் ஹாக், சென்னை அணியின் லவன்ஸை மாற்றினால் அணி வெற்றி பாதைக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக தனது யூ-டியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்தார்.
அதன்படி சென்னை அணியில் பின்வரிசயில் ஆடும் சாம் கரணை 3 ஆம் இடத்தில் களமிறக்க வேண்டுமென கோரிக்கை வைத்த அவர், பல டி-20 தொடர்களில் சாம் கரண் மூன்றாம் இடத்தில களமிறங்கி சிறப்பாக ஆடிவந்தார். அதுமட்டுமின்றி, இன்றைய போட்டியில் பிராவோக்கு பதில் இம்ரான் தாஹிர்க்கு வாய்ப்பளிக்க வேண்டுமெனவும், தமிழக வீரர் ஜெகதீசனுக்கும் அணியில் வாய்ப்பளிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…
ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம். சென்னை :முருகா..…
வேலூர் : கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கியது போல மர்மமான முறையில் படுகாயமுற்று…