ஐசிசி மகளிர் டி-20 உலகக்கோப்பையில் அயர்லாந்துக்கு எதிராக இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
தென் ஆப்பிரிக்காவில் நடந்து அவரும் மகளிருக்கான ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குரூப்-B வைச்சேர்ந்த இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் குரூப் சுற்று பிரிவில் கடைசி போட்டியாக இருந்தாலும் இந்தியா அரையிறுதிக்கு செல்ல நேற்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.
டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது, ஷெபாலி வர்மா மற்றும் ஸ்ம்ரிதி மந்தனா நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த நிலையில் ஷெபாலி வர்மா 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி ஸ்ம்ரிதி மந்தனா(87 ரன்கள்) அரைசதம் அடித்தார், 20 ஓவர்களில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது.
அயர்லாந்து சார்பில் லாரா டெலானி 3 விக்கெட்களும், ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். 156 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி முதல் ஓவரிலேயே 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அந்த அணி 9 வது ஒவரில் விளையாடிக்கொண்டிருக்கும் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது, அதன் பின் ஆட்டம் தொடரமுடியாத நிலையால் DLS முறை பின்பற்றப்பட்டது, இதில் அயர்லாந்து அணி 5 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றததாக அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப்பெற்று 5-வது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது. ஸ்ம்ரிதி மந்தனா ஆட்டநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…