#ICCWorldcup2023: 4வது வெற்றியை நோக்கி இந்தியா! 257 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த வங்கதேசம்!

INDvBAN

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றை லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேசம் அணியும் மோதி வருகிறது. புனேவில்  உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் வங்கதேசம் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை செய்தது.

ஆடுகளம் பெரிய அளவில் பந்துவீச்சுக்கும் சாதகமாக இல்லாததை கருத்தில் கொண்டு வங்கதேச தொடக்க வீரர்கள் எந்த நெருக்கடியும் இன்றி ரன்களை சேர்த்து வந்தனர். அதன்படி,  வங்கதேசம் அணியின் தொடக்க ஆடடகரர்களான தன்சித் ஹசன், லிட்டன் தாஸ் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பின்னர் தன்சித் ஹசன் 51, லிட்டன் தாஸ் 66 ரன்கள் எடுத்து இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.

இவர்களை தொடர்ந்து வந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ உட்பட தொடர்ந்து சரிசரிவென விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதில், விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் மட்டும் சற்று நிதானமாக விளையாடி அணிக்கு 38 ரன்களை சேர்த்தார். பின்னர் இவரும் விக்கெட்டை இழக்க, மற்றொரு வீரரான மஹ்முதுல்லாஹ் 46 ரன்களில் பும்ராவிடம் அவுட்டானார்.

இறுதியாக வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்களை எட்டியது. இந்திய அணியை பொறுத்தவரையில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

எனவே, வங்கதேசம் அணி 257 ரன்களை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஏற்கனவே உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் தொடர்ந்து மூன்று வெற்றிகளை பெற்ற இந்திய அணி, வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.  இந்த நிலையில், 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது இந்தியா.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்