மகளிர் டி-20 உலகக்கோப்பை 2023 போட்டிக்கான அட்டவணைகளை வெளியிட்டது ஐசிசி.
எட்டாவது ஐசிசி மகளிர் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான போட்டி அட்டவணைகளை ஐசிசி நேற்று வெளியிட்டது. தகுதிச்சுற்று போட்டிகள் கேப் டவுன், பார்ல் மற்றும் க்கெபர்ஹா ஆகிய நகரங்களிலும், நாக் அவுட் போட்டிகள் கேப்டவுனில் நடக்கும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் இறுதிப்போட்டி பிப்-26 ஆம் தேதி நடைபெறும், அன்று ஏதாவது குறுக்கீடு ஏற்பட்டால் பிப்-27 ஆம் தேதி நடத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
10 அணிகள் பங்கேற்கும் இந்த டி-20 உலகக்கோப்பை தொடரில் குரூப் 1 & குரூப் 2 என, 5 அணிகள் ஒவ்வொரு பிரிவிலும் இடம்பெறும் வகையில் பிரிக்கப்பட்டுள்ளது. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஸ்ரீ லங்கா, பங்களாதேஷ் ஆகிய 5 அணிகளும் குரூப் 1 இல் இடம்பெற்றுள்ளன. இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் குரூப் 2 பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
குரூப் 2இல் இடம்பெற்ற இந்தியா, பாகிஸ்தானை பிப்-12 இல் எதிர்கொள்கிறது. பிப்-21 வரை நடைபெறும் தகுதிச்சுற்றுப்போட்டிகளில், குரூப்பில் உள்ள ஒவ்வொரு அணியும் மற்ற 4அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும், முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதிப் போட்டிகள் பிப்-23 இல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…