#ICCAwards: 10 ஆண்டுகளுக்கான சிறந்த டெஸ்ட் அணி இதுதான்.. கேப்டனான கிங் கோலி!

Default Image

10 ஆண்டுகளுக்கான சிறந்த டெஸ்ட் அணியை ஐசிசி உருவாகியுள்ளது. இதில் டெஸ்ட் அணியில் கேப்டனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐசிசி விருதுகள்:

ஆண்டுதோறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), சிறந்த வீரர்களுக்கான விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்தவகையில், கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து ஐசிசி விருதுகள் வழங்குகிறது. இதில் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி-20 போட்டிகளில் பல சாதனைகள் நிகழ்த்தியவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறதாகவும், இதற்கான சிறந்த வீரர்களின் பட்டியலையும் ஐசிசி வெளியிட்டுள்ளது.

ஐசிசி, தனது கனவு டெஸ்ட், டி-20, ஒருநாள் அணிகளை உருவாகியுள்ளது. இதில் டி-20 மற்றும் ஒருநாள் தொடரில் தோனி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 10 ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் அணியில் கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சாளர் அஸ்வின் என 2 இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் இங்கிலாந்தை சேர்ந்த 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இடம்பெற்றுள்ள வீரர்கள்:

ஐசிசி-யின் இந்த டெஸ்ட் அணியில் இந்தியாவை சேர்ந்த விராட் கோலி, ரவிச்சந்திர அஸ்வின், ஆஸ்திரேலியா வீரர்களான டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும், இங்கிலாந்தை சேர்ந்த அலைஸ்டர் குக், பென் ஸ்டோக்ஸ், ஸ்டுவர்ட் போர்ட், ஜேம்ஸ் ஆண்டர்சன், நியூசிலாந்த் வீரரான கேன் வில்லியம்சன், இலங்கை வீரர் குமார் சங்ககாரா, மற்றும் தென்னாபிரிக்க வீரர் டேல் ஸ்டேயின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மூன்றிலும் இந்திய கேப்டன்:

ஐசிசியின் சிறந்த வீரர்களை கொண்ட டெஸ்ட், டி-20, ஒருநாள் அணிகளில் டி-20, ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தோனி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்பொழுதுள்ள டெஸ்ட் அணியிலும் இந்திய வீரர் விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் டெஸ்ட், டி-20, ஒருநாள் ஆகிய மூன்று தொடர்களிலும் இந்திய வீரர்களே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்