INDvBAN ICC WorldCup2023 [Image source : ICC]
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 17வது போட்டி இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணியும் மோத உள்ளன. இன்றைய போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட் மைதானத்தில் சரியாக 2 மணிக்கு துவங்க உள்ளது .
இந்த போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணி பந்துவீச களமிறங்க உள்ளது. ஏற்கனவே 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளிலும் வெற்றியை கண்ட இந்திய அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று முதலிடம் செல்லும் முனைப்பில் விளையாட உள்ளது.
அதே போல 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி , 2 தோல்வி என்ற நிலையில் உள்ள வங்க தேச அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று உலக கோப்பை தொடரில் அடுத்தகட்ட நகர்வுக்கு செல்ல தீவிரமாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா சார்பாக கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.
பங்களாதேஷ் அணி சார்பாக கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையில், லிட்டன் தாஸ், தன்சித் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், தௌஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம்(விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, நசும் அகமது, ஹசன் மஹ்மூத், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம் ஆகியோர் விளையாட உள்ளனர்.
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…
ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…