ஐசிசி உலகக்கோப்பை2023; முதன்முறையாக தகுதி பெற்றது அமெரிக்கா.!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்றில் விளையாட அமெரிக்க அணி முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது.
இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்றில் விளையாடுவதற்கான பிளே ஆஃப் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் முதன்முறையாக அமெரிக்க அணி தகுதி பெற்றுள்ளது.
உலகக்கோப்பை தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் அமெரிக்க அணி தான் விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஜூன் மாதம் தொடங்கும் இந்த தகுதிச்சுற்றில் விளையாடுவதற்கான அணியாக அமெரிக்கா தனது வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
4 wins off 5 matches – USA have qualified for the ICC Men’s @cricketworldcup Qualifier 2023 ????
Scorecard ????: https://t.co/wTwSR07cHU
Watch all the action LIVE and for FREE on https://t.co/MHHfZPyHf9 ???? pic.twitter.com/zq9n45XXbh
— ICC (@ICC) April 4, 2023