யுவராஜை கவுரவிக்கும் ஐசிசி ..! டி20 உலகக்கோப்பையில் புதிய ரோல் !!
Yuvaraj Singh : இந்த ஆண்டில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் யுவராஜ் சிங்கை தூதராக ஐசிசி அறிவித்துள்ளது.
நடைபெற்ற கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20 உலக கோப்பை நடக்க இருக்கிறது. இதை தெளிவாகச் சொன்னால் இன்னும் 36 நாட்களில் டி20 உலக கோப்பை தொடரானது தொடங்க உள்ளது. இந்த முறை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரை ஐசிசி (ICC) மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தொடர் நடைபெற இருப்பது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் என்பதால் அமெரிக்கா கிரிக்கெட்டை பிரபல படுத்தும் வகையில், அமெரிக்காவில் பிரபலமான ஜாமாய்க்கா நாட்டை சேர்ந்த தடகள வீரரான உசைன் போல்ட் முதலில் தூதரக நியமிக்கபட்டார். அவரை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் அதிரடி வீரரான கிறிஸ் கெயில் தூதரக நியமக்கபட்டார்.
தற்போது அவரை தொடர்ந்து இந்திய நாட்டிற்காக யுவராஜ் சிங் தூதரக நியமிக்கபட்டுள்ளார். யுவராஜ் சிங்கை தூதரக அறிவித்த பிறகு நேற்று அவர் இது குறித்து பேசி இருந்தார். அவர் கூறுகையில், “டி20 போட்டிகள் விளையாடியது எல்லாம் என்னால் மறக்க முடியாத நினைவுகள் ஆகும், அதிலும் ஒரே ஓவருக்கு 6 சிக்ஸர்கள் அடித்த நினைவுகழும் அடங்கும்.
மேலும், நடைபெற இருக்கும் இந்த டி20 உலகக்கோப்பைக்கு நான் ஒரு பங்காக இருப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். இது வரை இல்லாத டி20 போட்டிகள் அளவிற்கு இது மிக பெரிய தொடராக அமையும். அதிலும் குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இந்த ஆண்டின் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டியாக அமையும்.
இந்த டி20 தொடரில் நான் ஒரு பகுதியாக இருந்து சிறந்த வீரர்கள் புதிய மைதானத்தில் விளையாடுவதை பார்ப்பது எனக்கு கிடைத்த கவுரமாக தான் நான் பார்க்கிறேன்”, என்று யுவராஜ் சிங் பேசி இருந்தார். கடந்த 2007-ம் ஆண்டு டி20I உலகக்கோப்பையை வெல்வதற்கு யுவராஜ் சிங் சிறப்பான பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.