இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையே சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து, 2 ஆவது டெஸ்ட் போட்டி வருகின்ற 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய கேப்டன் கோலி தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ளார். அதே நேரத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முன்னேறியுள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய கேப்டன் கோலி முதல் இன்னிங்ஸில் 11, 2- இன்னிங்ஸில் 72 ரன்கள் என 83 ரன் மட்டுமே எடுத்தார். இதன்காரணமாக 852 புள்ளிகளுடன் கோலி 5-வது இடத்திற்கு சென்றார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதல் இன்னிங்ஸில் 218, 2- வது இன்னிங்ஸில் 40 என மொத்தமாக 258 ரன்கள் குவித்து 883 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேறி சென்றார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் 919 புள்ளிகளுடன் கேன் வில்லியம்சனும், 891 புள்ளிகளுடன் ஸ்டீவ் ஸ்மித் 2-வது இடத்தில் உள்ளார்.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…