ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்: முதலிடத்தை இழந்த இந்தியா.. முன்னேறிய ஆஸ்திரேலியா!

Default Image

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இருந்து இந்திய அணி பின்னடைவை சந்தித்து, இரண்டாம் இடத்திற்கு விரைந்தது.

ஐசிசி கிரிக்கெட் தரவரிசைப்பட்டியல், புள்ளிகளின் அடிப்படையில் முதலிடத்தை தீர்மானிப்பர். அந்தவகையில் இந்திய அணி, முதல் இடத்தில இருந்து வந்தது. ஆனால் நடப்பாண்டு முதல் அதற்கான ஐசிசி, விதிமுறைகளை மாற்றியுள்ளது. இதன் காரணமாக முதலிடத்தில் இருந்த இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு, ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில் உள்ளது.

முத்தய விதிகளின்படி, வெற்றி சதவீததை புள்ளிகள் அட்டவணையாக இல்லாமல், ஐசிசி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் தரவரிசையின் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதில் வெற்றி சதவீதம் அதிகமாக இருக்கும் அணி, முதலிடத்தில் இருக்கும். இதன்காரணமாக, இந்தியாவின் வெற்றி சதவீதம் 75 ஆகவும், ஆஸ்திரேலிய அணியின் வெற்றி சதவீதம் 82.22 ஆக உள்ளது.

இதன் காரணமாக இந்திய அணி இரண்டாம் இடத்திற்கு சென்றடைந்தது. தற்பொழுது விதிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முக்கியம் வாய்ந்ததாக கருதப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்