ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலகக்கோப்பை(மேஸ்)… வெளியிட்ட ரிக்கி பாண்டிங்.!
ஐசிசி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலகக்கோப்பையை ரிக்கி பாண்டிங் இன்று வெளியிட்டார்.
2021-23 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான, ஐசிசி டெஸ்ட் மேஸ்(Mace) என அழைக்கப்படும் ஐசிசி டெஸ்ட் உலகக்கோப்பையை ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இன்று வெளியிட்டார், ஐசிசி தனது ட்விட்டரில் இதனை வெளியிட்டுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் 7இல் தொடங்கி 11 வரை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்த டெஸ்ட் மேஸ்-க்காக விளையாடுகின்றன.
இந்தியா இரண்டாவது முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முறையாக கடந்த 2021இல் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணியுடன் விளையாடி தோல்வியுற்றது.
The Test Mace ????
Australia legend Ricky Ponting unveiled the trophy for the #WTC23 Final today in the company of some future stars! pic.twitter.com/grWcH54zch
— ICC (@ICC) May 19, 2023