ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; ரஹானேவுக்கு இடம், இந்திய அணி அறிவிப்பு.!
ஆஸ்திரெலிவிற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் 7-11 வரை,லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஆஸ்திரேலியா முதல் அணியாக டெஸ்ட் புள்ளிப்பட்டியலில்(2021-23) பெற்ற வெற்றி மற்றும் ரன் ரேட் அடிப்படையில் தகுதி பெற்றது, இதையடுத்து இந்தியா பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் இரண்டாவது அணியாக இந்தியா தகுதி பெற்றது.
இந்நிலையில் ஜூன் 7 இல் நடைபெறும் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், அஜிங்க்யா ரஹானேவிற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பும்ரா, ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ரஷப் பந்த் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
இந்திய அணி: ரோஹித் சர்மா(C), சுப்மன் கில், விராட் கோலி, சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, கே.எல்.ராகுல், கே.எஸ்.பரத் (WK), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், மொஹம்மது ஷமி, மொஹம்மது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட்</
???? NEWS ????#TeamIndia squad for ICC World Test Championship 2023 Final announced.
Details ???? #WTC23 https://t.co/sz7F5ByfiU pic.twitter.com/KIcH530rOL
— BCCI (@BCCI) April 25, 2023
p>