ஐசிசி டெஸ்ட் பவுலிங் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி 18-வது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றது. கடந்த 12ஆம் தேதி தொடங்கிய டெஸ்ட் தொடர் இன்று வரை நடைபெற்றது. இந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளனர்.
இப்போட்டி இன்று முடிவடைந்ததைத் தொடர்ந்து ஐசிசி தரவரிசை பேட்டிங் மற்றும் பவுலிங் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் பவுலிங் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி 18-வது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பேட்டிங் தரவரிசையில் முதல் 10 இடங்களில் பாபர் அசாம் எட்டாவது இடத்தில் இருந்து 7-வது இடத்திற்கும், ரிஷாப் பண்ட் ஏழாவது இடத்திலிருந்து 8-வது இடத்திற்கு மாறி உள்ளனர். மற்ற வீரர்கள் அப்படியே உள்ளனர்.
பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும், டெஸ்ட்தொடர் முடிவில் தொடர் ஆட்டநாயகன் விருதையும் தட்டிப் பறித்தார். இவர் முதல் டெஸ்டில் 10, இரண்டாவது டெஸ்டில் 8 விக்கெட் என மொத்தம் 18 விக்கெட்டை பறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…