டி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறும்- ஐசிசி
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிரிக்கெட் போட்டிகள்,கால்பந்து போட்டிகள் உள்ளிட்ட பல போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது. எனவே கொரோனா காரணமாக டி20 உலகக் கோப்பைப் போட்டி திட்டமிட்டபடி அதே தேதிகளில் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு இடையில் தான் ஐசிசி கூட்டம் நடைபெற்றது. இதில் டி20 இந்தக்கூட்டத்தில் டி20 உலகக் கோப்பையை ஒத்திவைப்பதற்கான முடிவு எதுவும் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .அதற்குள் கொரோனாவின் பாதிப்புகள் குறைந்துவிடும் என்பதால் திட்டமிட்டபடி உலகக் கோப்பை நடத்த முடியும் என்று ஐசிசி நம்பிக்கை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.